என்ன மறக்காதீங்க | Enna Marakkaadheenga Song Lyrics - Bro. Gersson Edinbaro | Tamil Christian Songs Lyrics
Singer | Bro. Gersson Edinbaro |
என்ன மறக்காதீங்க விட்டு விலகாதீங்க
உங்க முகத்த நீங்க மறச்சா நான் எங்கே ஓடுவேன்(2)
எங்கே ஓடுவேன் உம் சமுகத்தை விட்டு
உம்மை விட்டு விட்டு எங்கும் ஓடி ஒழியமுடியுமோ(2)
யோனாவை போல நான் அடித்தட்டிலே
படுக்கை போட்டாலும் விடமாட்டிரே(2)
ஓடிபோனாலும் தேடி வந்தீரே
மீனைகொண்டாகிலும் மீட்டு வந்தீரே(2)
(என்ன மறக்காதீங்க)
பேதுரு போல் உம்மை தெரியாதென்று
மறுதலித்தாலும் நீர் விடவில்லையே(2)
துரோகம் செய்தாளும் தூக்கி விட்டீரே
மந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே(2)
(என்ன மறக்காதீங்க)