Appa unga madiyila naan | அப்பா உங்க மடியில நான் தல சாய்க்கணும் - Varsha | Tamil Christian Songs Lyrics
Singer | Varsha |
அப்பா உங்க மடியில நான் தல சாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புல தான் உயிர் வாழனும்-2
என் மனசு புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா-2
1.என் உசுருக்குள்ள கலந்து நீங்க உயிர் வாழ்வதும் ஏனோ
உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு உயிர் தந்ததும் ஏனோ – 2
கண்ணுக்குள்ள பொத்து வெச்சி காத்து வந்தது ஏனோ
என் கால்கள் ரெண்டும் இடரிடாமல் சுமந்து வந்ததும் ஏனோ – 2
2.உங்க உள்ளங்கையில் என்ன வரஞ்சி பாத்து கிட்டது ஏனோ
உங்க கைகள் ரெண்டிலும் ஆணி அடிக்க பொறுத்து கிட்டதும் ஏனோ – 2
தூங்காம உறங்காம காத்துக்கொண்டதும் ஏனோ
வழியில் எல்லாம் நிழல் போல தொடர்ந்து வந்ததும் ஏனோ – 2
3.பாவியென் மேல நீங்க வெச்ச பாசம் புரியல
நேசர் உம்ம நேசிக்க இந்த பாவிக்கு தெரியல – 2
உதிரம் சிந்தி உசுர தந்த உண்மையான அன்பு
உடஞ்சி நொறுங்கி மண்டியிட்டேன் இயேசுவுக்கு முன்பு – 2
Appa unga madiyila naan thala saaikanum
Appa unga nenapula naan uyir vaazhanum – 2
Ya manasu purija deivam neenga pa
Ya manasu neranja selvam yesappa – 2
1.Ya usuru kulla kalanthu ninga uyir vaazhvathum yeno
Unga usura koduthu paavi enaku uyir thanthathum yeno – 2
Kannukula pothu vechi kaathu vanthathu yeno
Kaalgal rendum idaridamal sumanthu vanthathu yeno – 2
2.Unga ullam kaiyil enna varanji paathu kittathu yeno
Unga kaigal rendilum aani adika poruthu kittathu yeno – 2
Thungama urangama kaathunkondathu yeno
Vazhi ellam nizhal pola thodarnthu vanthathu yeno – 2
3.Paaviyin mela ninga vecha paasam puriyala
Nesar umma nesika intha paaviku therila – 2
Uthiram sinthi usura thantha unmaiyana anbu
Udanji norungi manditen yesuvuku munbu – 2